இடுமருந்து முரிந்து வாந்தியாக!!!
இடுமருந்து வெளியேற்ற
போமேநீ மருந்தீடு வாந்தியாகப் பொங்கமுடன்
கரப்பன்சார் தன்னை வாங்கித்
தாமேநீ யிறாப்புடைய படியிலப்பா
தாழ்வாகக் காற்ப்படிசார் பயில்தானும்
வாமேநீ யெலுமிச்சம் பழச்சார் நேரே
வளமாக அந்தி சந்தி படியில்விட்டு
ஆமேநீ யுதயாதி துடங்கு முன்பே
அப்பனே உள்ளுக்குக் கொடுத்திடாயே.
கொடுத்திடவே வாந்தியது காணும்பாரு
கொடிதான மருந்தீடு எல்லாம் வீழும்
அடுத்திடவே வாந்தியது அதிகங் கண்டால்
அடைவாக பச்சரிசி பருப்பினோடு
கடுத்திடவே கஞ்சியது கொண்டபோது
களங்கமற வாந்தியது நிற்க்கும் பாரு
கொடுத்திடப்பா மருந்தீடு தீர்ந்து போச்சு
தோஷமது விலகிற்று துழிலைப் பாரே.
கொடுக்கப்பட்ட மருந்து முறிந்து வாந்தியாக வெளியே வர வேண்டுமாயின் கரிசலாங்கண்ணி இலையைக் கொண்டு வந்து சாறுபிழிந்து இலுப்ப மரத்தில் செய்த படியில் அதனை ஊற்றிக்
கொள்ளவும் பின்னர் கால்படி சாறு எடித்து எழுமிச்சம் பழச் சாறு விட்டு
காலை, மாலை குடிக்கவும் இதனை காலை உதயத்திற்க்கு முன்னர்
கொடுக்கவேண்டும்.
இதனைக் குடித்தவுடன் வாந்தி வரும் அந்த வாந்தியில் கொடிய மருந்தீடு எல்லாம் வந்து விழும் வாந்தி அதிகமாக இருந்தால் பச்சரிசி
பருப்பு சேர்த்து கஞ்சி வைத்து கொடுக்கவும். வாந்தி நின்று விடும் இடு
மருந்து முறிந்துவிடும் தோஷம் விலகிவிடும் நிம்மதியாக மற்ற வேலையைப் பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Ayya Vanakaam,
ReplyDeleteNallathoru samaythil intha pathippai naan parthen.
Nandri,