பெண்களுக்கு கெர்பகாலத்தில் ஏற்படும் உபாதைகள் நீங்க!!!
நிலவாகைச் சூரணம்
நலமான சூரணமொன்று சொல்லகேளு
நன்றான நிலவாகைச் சுக்கும் கூட்டி
மிளமாக மிளகு வாய்விளங்கம் ஓமம்
பேரான வகைக்கு ஒரு பலமே தூக்கி
சிலமாக ரவிமுகத்தில் உலரப்போட்டு
சிதறாமல் இடித்துச் சூரணந்தான் செய்யே.
அகத்தியர் பெருமான் இங்கு நிலவாகைச் சூரணம் பற்றிக் கூறி விளக்கு
கிறார்.நிலவாகை,சுக்கு,மிளகு, வாய்விளங்கம்,ஓமம் ஆகியவற்றை வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்துச் சுத்தம் செய்து வெயிலில் காயப்
போடவும். நன்றாகக் காய்ந்ததும் அவற்றைச் சுத்தம் செய்துக் கல்லுரலில்
போட்டு இடித்துத் தூளாக்கிவிடவும்.
நலமாகச் சர்க்கரைதான் சாமனாய்க் கூட்டித்
தவறாமல் இருநேரம் கொண்டால் கேள்
கேளப்பா வாயுவென்றது எல்லாம் போகும்
கொடிதான பித்தமெல்லாம் கீழ்நோக்கிப் போகும்
வாளப்பா உஷ்ண நோயெல்லம் தீரும்
வளமான பொருமலோடு விம்மல் தீரும்
நாளப்பா சேத்தும நோயெல்லாம் தீரும்
நலமான விக்கலொட வாந்தி தீரும்
தாளப்பா உடம்பெரிவு சுவாச காசந்தான்
தவறுண்டு போகுனடா சாற்றக் கேளு.
முன் கூறியவாறு இடிது தூளாக்கிச் சலித்துச் சரி எடையாகச் சர்க்கரை
கலந்து பத்திரப்படுத்திய இச்சூரணத்தை காலை, மாலை என இருவேளையும் வெருகடியளவு எடுத்து தேனில் கொள்ள வாய்வு உபாதைகள் நீங்கும். பித்தம் இறங்கிக் குணமாகும். உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் யாவும் நீங்கிக் குணமாகும். பொருமல்,விம்மல்,
சிலேத்துமத்தாலுண்டாகும் நோய்கள் விக்கல், வாந்தி,உடலெரிவு,சுவாச
காசம் ஆகியவையும் நீங்கிக் குணமுண்டாகும்.
சாற்றுகிறேன் நீரருகல் மலபந்தங்கள்
தளராத வயிறு விம்மல் இருமல் தீரும்
தேற்றுகிறேன் குண்மம் எட்டு மகோதரங்கள்
தெளிவான வாய்வெல்லாம் தீருந்தீரும்
ஆற்றுகிறேன் கெர்பவலி கெர்ப்ப ரோகம்
ஆச்சரியம் புளுக்களெல்லாம் அகன்று போகும்
சாற்றுகிறேன் வெந்நீரில் கொண்டாயனால்
கலங்காதே வயிற்றிலுள்ள வியாதிபோமே.
முன்கூறிய நோய்கள் மட்டுமல்லாது நீர்க்கட்டு,மலக்கட்டு, வயிறு விம்மல், எட்டு வகை குண்மங்கள், மகோதரம், வாய்வு உபாதைகள்,
கெர்ப்பவலி, கெர்ப்பத்தில் உண்டாகும் நோய்,கெர்ப்பப்பையில் உண்டாகும் புழுக்கள் ஆகியவை நீங்கிக் குணமாகும்.இச்சூரணத்தை
வெந்நீருடன் சேர்த்து உட்கொள்ள வயிற்றில் உண்டாகும் வியாதிகள்
யாவும் அகன்று குணமுண்டாகும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Very gud info
ReplyDeleteDear Sir- Please share details about சுனங்கு விருட்சம் tree. Somebody told it is located in Namakkal dist.
ReplyDeleteதங்களின் அனைத்துவிதமான இயற்கையோடு இணைந்த சித்த மருத்துவ குறிப்புகளுக்கு மிக்க நன்றி. விலைமதிப்பில்லா மருந்துகளை, மிகக்குறைந்த விலையில் அளிக்கும் தங்களின் சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். சதுரகிரி மருந்துகள் எந்த பக்க விளைவுகள் இல்லாமல் நன்கு பயனளிக்கிறது. தங்களின் மருத்துவமும், சமூக சேவையும் மேன்மேலும் சிறக்க என் குடும்பத்தினரின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete