சித்தர் குறிப்புக்கள்

பித்த வெடிப்புக்கு பச்சிலை சாறு!!!

                                              பித்த வெடிப்புக்கு பச்சிலை சாறு!!!


                        
                        பாரேநீ பித்தவெடி வந்தானால்

                             பாங்கான மருதுடைய விலையை வாங்கி

                      சீரேநீ பசுவின்பால்தனில் துவைத்துச்

                            சிறப்பாக மூன்றுநாட் குடிக்கச் செல்லு

                    வீரேநீ பத்தியந்தான் பாலுஞ்சோறும்

                           விதமாக ஏழுநாள் நீரை வாரு

                  பேரேநீ போகருட கடாட்சத்தாலே

                           பேதமில்லை புலிப்பாணி பாடினேனே!


                                                                             மருதமரத்து இலையை கொண்டு வந்து பசும்பால் விட்டு
நன்றாக இடித்து பிழிந்து அந்தச் சாறை மூன்று நாட்கள் ஆறு  வேலை
குடிக்கக் கொடுத்துப் பாலுஞ் சாதமும் சாப்பிட்டு மூன்று நாள் அப்படியே
இருந்து மறுபத்தியமிருந்து ஏழாவது நாள் தலைமூழ்கி விட்டுப் பின்னர்
எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் இதனால் பித்த வெடிப்பு
மறைந்துவிடும்.

 { இந்த குறிப்பு  சித்தபெருமான் புலிப்பாணி அருளிய வைத்தியசாரம் }
                                                                               

கர்ப்பம் உண்டாகமல் இருக்க

                                             கர்ப்பம் உண்டாகமல் இருக்க 

                                                

                                 தானப்பா கன்னியர்கள் விதவை கூடித் 
                                    தான் தழுவ வேனுமென்றால் சொல்லக் கேளு
                                 மானப்பா தலைமுழுகும் பக்கம்தன்னில்
                                     மைந்தனனே புணர்ந்திடவே கர்பமில்லை
                                வீணப்பா விதுவறிய  மாட்டாமற்றான்
                                     விதமாகக் கொலைகள் வந்து தேடும்பாரு
                                 ஊணப்பா இதுவல்லோ பாவம் பாவம்
                                     உத்தமனே அறிவாலே அறிந்துதானே


           கன்னிப் பெண்கள்  அல்லது கைமைப் பெண்களுடன் உறவு கொள்ள
ஆசைப்படுவர்கள் கர்ப்பம் உண்டாகி விடாமல் இருக்க வழிதனை கூறு
கிறேன். வீட்டு விலக்காகும்  மூன்று நாட்களுக்கு முன் உறவு கொள்ள
அதனால் கர்ப்பம் உண்டாகாது. இதனை தெரிந்தும்  உறவு கொண்டால் சங்கடங்கள் ஏற்ப்படும்.தவிர இது பாவமான செயல் என்பதை ஆழ்ந்து அறிந்து கொள்.

                [   இந்த முறையை திருமணமானவர்கள் தற்போது குழந்தை
வேண்டாம் என்று உணர்ந்தால் இந்த முறையை கடைப்பிடிக்கலாம்
தவறில்லை]  என்று சித்தபெருமான் புலிப்பாணி அருளிய வைத்திய
சாரம் என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது.                                               

இடுமருந்து முரிந்து வாந்தியாக!!!                                                    இடுமருந்து  வெளியேற்ற
        
            போமேநீ மருந்தீடு வாந்தியாகப் பொங்கமுடன்
                     கரப்பன்சார் தன்னை வாங்கித்
            தாமேநீ யிறாப்புடைய படியிலப்பா
                     தாழ்வாகக் காற்ப்படிசார் பயில்தானும்
            வாமேநீ யெலுமிச்சம் பழச்சார் நேரே
                     வளமாக அந்தி சந்தி படியில்விட்டு
           ஆமேநீ யுதயாதி துடங்கு முன்பே
                    அப்பனே உள்ளுக்குக் கொடுத்திடாயே.

           கொடுத்திடவே வாந்தியது  காணும்பாரு
                    கொடிதான மருந்தீடு எல்லாம் வீழும்
           அடுத்திடவே வாந்தியது அதிகங் கண்டால்
                    அடைவாக பச்சரிசி பருப்பினோடு
           கடுத்திடவே கஞ்சியது கொண்டபோது
                    களங்கமற வாந்தியது நிற்க்கும் பாரு
           கொடுத்திடப்பா மருந்தீடு தீர்ந்து போச்சு
                    தோஷமது விலகிற்று துழிலைப் பாரே.

       கொடுக்கப்பட்ட மருந்து முறிந்து வாந்தியாக வெளியே வர வேண்டுமாயின் கரிசலாங்கண்ணி இலையைக் கொண்டு வந்து சாறுபிழிந்து இலுப்ப மரத்தில் செய்த படியில் அதனை ஊற்றிக்
கொள்ளவும் பின்னர் கால்படி சாறு எடித்து எழுமிச்சம் பழச் சாறு விட்டு
காலை, மாலை குடிக்கவும் இதனை காலை உதயத்திற்க்கு முன்னர்
கொடுக்கவேண்டும்.

       இதனைக் குடித்தவுடன் வாந்தி வரும்  அந்த வாந்தியில் கொடிய மருந்தீடு எல்லாம் வந்து விழும் வாந்தி அதிகமாக இருந்தால் பச்சரிசி
பருப்பு சேர்த்து கஞ்சி வைத்து கொடுக்கவும். வாந்தி நின்று விடும் இடு
மருந்து முறிந்துவிடும் தோஷம் விலகிவிடும் நிம்மதியாக மற்ற வேலையைப் பார்க்கலாம்.  


                                                                                                                  

பெண்களுக்கு கெர்பகாலத்தில் ஏற்படும் உபாதைகள் நீங்க!!!

                                                                                          
                                                        நிலவாகைச் சூரணம்

                                                                
            
                                   நலமான சூரணமொன்று சொல்லகேளு
                                      நன்றான நிலவாகைச் சுக்கும் கூட்டி
                                  மிளமாக மிளகு வாய்விளங்கம் ஓமம்
                                      பேரான வகைக்கு ஒரு பலமே தூக்கி
                                 சிலமாக ரவிமுகத்தில் உலரப்போட்டு
                                       சிதறாமல் இடித்துச் சூரணந்தான் செய்யே.

    அகத்தியர் பெருமான் இங்கு நிலவாகைச் சூரணம் பற்றிக் கூறி விளக்கு
கிறார்.நிலவாகை,சுக்கு,மிளகு, வாய்விளங்கம்,ஓமம் ஆகியவற்றை வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்துச் சுத்தம் செய்து வெயிலில் காயப்
போடவும். நன்றாகக் காய்ந்ததும் அவற்றைச் சுத்தம் செய்துக் கல்லுரலில்
போட்டு இடித்துத் தூளாக்கிவிடவும்.

                                 நலமாகச் சர்க்கரைதான் சாமனாய்க் கூட்டித்
                                     தவறாமல் இருநேரம் கொண்டால் கேள்
                                 கேளப்பா வாயுவென்றது எல்லாம் போகும்
                                      கொடிதான பித்தமெல்லாம் கீழ்நோக்கிப் போகும்
                                 வாளப்பா உஷ்ண நோயெல்லம் தீரும்
                                        வளமான பொருமலோடு விம்மல் தீரும்
                                  நாளப்பா சேத்தும நோயெல்லாம் தீரும்
                                        நலமான விக்கலொட வாந்தி தீரும்
                                  தாளப்பா உடம்பெரிவு சுவாச காசந்தான் 
                                        தவறுண்டு போகுனடா சாற்றக் கேளு.

     முன் கூறியவாறு இடிது தூளாக்கிச் சலித்துச் சரி எடையாகச் சர்க்கரை
கலந்து பத்திரப்படுத்திய இச்சூரணத்தை  காலை, மாலை  என இருவேளையும் வெருகடியளவு எடுத்து தேனில் கொள்ள வாய்வு உபாதைகள் நீங்கும். பித்தம் இறங்கிக் குணமாகும். உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் யாவும் நீங்கிக் குணமாகும்.  பொருமல்,விம்மல்,
சிலேத்துமத்தாலுண்டாகும் நோய்கள் விக்கல், வாந்தி,உடலெரிவு,சுவாச
காசம் ஆகியவையும் நீங்கிக் குணமுண்டாகும்.

                               
                               சாற்றுகிறேன் நீரருகல் மலபந்தங்கள்
                                    தளராத வயிறு விம்மல் இருமல் தீரும்
                               தேற்றுகிறேன் குண்மம் எட்டு மகோதரங்கள்
                                    தெளிவான வாய்வெல்லாம் தீருந்தீரும்
                               ஆற்றுகிறேன் கெர்பவலி கெர்ப்ப ரோகம்
                                     ஆச்சரியம் புளுக்களெல்லாம் அகன்று போகும்
                               சாற்றுகிறேன் வெந்நீரில் கொண்டாயனால்
                                     கலங்காதே வயிற்றிலுள்ள வியாதிபோமே.

    
   முன்கூறிய நோய்கள் மட்டுமல்லாது நீர்க்கட்டு,மலக்கட்டு, வயிறு விம்மல், எட்டு வகை குண்மங்கள், மகோதரம், வாய்வு உபாதைகள்,
கெர்ப்பவலி, கெர்ப்பத்தில் உண்டாகும் நோய்,கெர்ப்பப்பையில் உண்டாகும் புழுக்கள் ஆகியவை நீங்கிக் குணமாகும்.இச்சூரணத்தை
வெந்நீருடன் சேர்த்து உட்கொள்ள வயிற்றில் உண்டாகும் வியாதிகள்
யாவும் அகன்று குணமுண்டாகும்.                                      
                                                                         
                                                                           
                                                                         


                                                   

சித்தர்கள் குறிப்பு!!!

                                                            சித்தர்கள் குறிப்பு!!! siththarkal

                                         
           


          மிகுனும் குறையினும் நோய் செய்யும் நூலோ!
       வனி முதலா எண்ணிய மூன்று

    வாதம் பித்தம் சிலேத்துமம் என்ற மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோயினை உண்டாக்கும் என்று தெய்வபுலவர் திருவள்ளுவர் தெரிவிக்கிறார்.

    
    இந்த மூன்று அதன் அளவைவிட மிகுதலும் குறைதலும் நாம் செய்யும் பிழைகள்தான் நோய்க்கு காரணம்.

     ‘தீயன வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

     நோயன வின்றிப்படும்’
   
    பசி தீயின் அளவின்படி அல்லாமல் ஆராயாமல் மிகுதியாக உண்டால் அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்படும் எனறார்.

    ஆகார பேதத்தினால் வந்த நோயினை போக்கி குணம் செய்விப்பது
எப்படி என்பதையும் கூறுகிறார்.

         “ நோய்  நாடி நோய்முதல்  நாடி அது  தணிக்கும்
              வாய் நாடி வாய்ப்புச் செயல்’’

         “ உற்றான் அளவும் பிணியளவும் காளமும்
          கற்றான் கருதுச் செயல்
     
    நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் மூலகாரணம் ஆராய்ந்து
அதை தணிக்கும் வழியேயும் ஆராய்ந்து உடலுக்கு பொருந்தும் படியாக
செய்யவேண்டும் என்றும்.

    நோயுற்றவனுடைய வயதும் நோயின் அளவையும் காலத்தையும்
ஆராய்ந்து சிகிச்சை செய்பவன்தான் மருத்துவ நூலை கற்றவன் என்கிறார்.